News

அண்ணாத்த ரஜினியை சோதிக்கும் கேஜிஎப் யாஷ்.. தலைவருக்குனே வருவீங்களா என புலம்பும் ரசிகர்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது கொரானா பிரச்சனையால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் படத்தின் படப்பிடிப்பு 80% முடிந்து விட்டதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

விஸ்வாசம் என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்திற்குப் பிறகு சிறுத்தை சிவா ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார். மேலும் ரஜினிகாந்துக்கு ஜோடியாக எவர்கிரீன் குஷ்பூ மற்றும் மீனா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

கீர்த்தி சுரேஷ் மற்றும் நயன்தாரா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். முதலில் தீபாவளி வெளியீடாக ஆரம்பிக்கப்பட்ட அண்ணாத்த படம் சில காரணங்களால் ஆயுதபூஜை விடுமுறையை டார்கெட் செய்தது.

ஆனால் அதே தேதியில் உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் கே ஜி எஃப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கே ஜி எஃப் படத்தின் முதல் பாகம் தமிழ்நாட்டில் பெரிய வெற்றியைப் பெற்றது. இதனால் இரண்டாம் பாகத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி இருக்கும் நிலையில் தியேட்டர்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்படலாம் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் யோசித்து வருகிறது.

தற்போது அஜித் நடிப்பில் உருவாகிவரும் வலிமை படம் தீபாவளி வெளியீட்டில் இருந்து தள்ளி போக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் தீபாவளி வெளியீடாக அண்ணாத்த படத்தை களமிறக்க சன் பிக்சர்ஸ் முடிவு செய்துள்ளது. மேலும் அதே தேதியில் சூர்யாவின் அருவா படம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close