CinemaNews

ஆட்டோ டிரைவர், மெட்டி ஒலி சீரியல் நடிகர், சினிமா இயக்குனரின் அடுத்த அதிரடி

நடிகர் போஸ் வெங்கட் பலராலும் அன்புடன் பார்க்கப்பட்ட ஒரு முகம். காரணம் மெட்டி ஒலி சீரியல் என்றே சொல்லலாம். குடும்பத்தின் மூத்த மருமகனாக அமைந்த கதாபாத்திரம் அவருக்கு பல ரசிகர்களை, ரசிகைகளை உருவாக்கிக்கொடுத்தது.

ஆட்டோ டிரைவராக இருந்து நடிகராகி பல படங்களில் நடித்து, இப்போது தன் ஆசைப்படி இயக்குனராகிவிட்டார். ஆட்டோ ஓட்டுனரின் கதையையே கன்னி மாடம் என்ற பெயரில் முதல் படமாக எடுத்து வெற்றி பெற்றுவிட்டார்.

இதே வேகத்துடன் உற்சாகத்துடனும் அவர் அடுத்த படத்தை இயக்க தொடங்கிவிட்டாராம். உரியடி விஜயகுமார், பசுபதி நடிக்கும் இப்படத்தை போஸ் இயக்குகிறாராம். பாஸ்கர் சக்தி வசனம், திரைக்கதை வசனம் எழுதி தயாரிக்கிறாராம்.

விவேகா பாடல்கள் எழுத, சிவசங்கர் மாஸ்டர் கலை அமைக்க, தினேஷ் சுப்பராயன் சண்டைக்காட்சிகள் அமைக்க, இனியன் ஒளிப்பதிவு செய்ய, ஹரி சாய் இசையமைக்கிறார்கள்.

நீரின்றி அமையாது உலகு என்பதை கொண்டு நீருக்கும் ஊருக்கும் போருக்கும் உள்ள தொடர்புகளை படத்தில் மையகருத்தாக எடுத்து வைக்கிறார்களாம்…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close