Corona

ஊரடங்கு அமுலில் இருந்த சமயம் யாழில் பொதுஜன பெரமுன அமைப்பாளர் கைது!

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு மதுபோதையில் நடமாடித் திரிந்த பொதுஜன பெரமுன கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளர் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவ்வாறு கைது செய்யப்பட்டவர் வட்டுக்கோட்டைத் தொகுதியின் அமைப்பாளர் திருலோகநாதன் என பொலிசார் தெரிவித்தனர் .நேற்று இரவு பொலிஸார் ரோந்து கடமையில் ஈடுபட்டிருந்த பொழுது இவர் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்தனர்.

அவரை விசாரணைக்கு உட்படுத்தியபோது மதுபோதையில் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபரை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close