Corona

ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு போதும்.. இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

அரிசி, தேங்காய், மரக்கறி, முட்டை, கோழி இறைச்சி போன்றவற்றை தட்டுப்பாடின்றி வழங்கக் கூடிய நிலை உள்ளது.

இவற்றை விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களிடமிருந்து உரிய முறையில் கொள்வனவு செய்து முறையாக பகிர்ந்தளிக்க முடியும் என பசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

நேற்று (25,03,2020) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்கள், வங்கித் தலைவர்கள், அத்தியாவசிய உணவுப் பொருட்களுடன் தொடர்புபட்ட அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது பல்வேறு தீர்மானங்களை மேற்கொண்டதாக பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

அரசாங்க வைத்தியசாலைகளில் பதிவுசெய்து தொடர்ச்சியாக மருந்துகளை கொள்வனவு செய்யும் நோயாளிகளுக்கு உரிய மருந்து பட்டியல்களின் படி வீடுகளுக்கே மருந்துகளை விநியோகிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தனியார் பாமசிகளில் மருந்துகளை கொள்வனவு செய்யும் நோயாளிகளுக்கு பிரதேசத்தில் தெரிவுசெய்த சில பாமசிகளின் மூலம் வீடுகளுக்கே பகிர்ந்தளிக்கும் முறைமையொன்றை பின்பற்றுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

ஒரே ஒரு தொலைபேசி ஓடர்கள் மூலம் வீடுகளுக்கே எரிவாயுவை விநியோகிக்கும் நிகழ்ச்சித்திட்டமொன்றையும் உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு பசில் ராஜபக்ஷ அவர்கள் அந்நிறுவனங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

முழு திட்டத்தினதும் நோக்கம் மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்த்து கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு சுகாதார துறை முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிபெறச் செய்வதாகும்.

பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைக்கு பிரதேச செயலாளர்கள், கிராம சேவை அதிகாரிகள், விவசாய ஆராய்ச்சி அதிகாரிகள், சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளின் பங்களிப்பு பெறப்படும். தற்போது பல்வேறு நாடுகள் முழுமையாக ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

உருவாகியுள்ள நிலைமையை கருத்திற் கொண்டு அதிக கவனம் செலுத்தி நிலையான உற்பத்தி பொருளாதாரத்தை நாட்டில் கட்டியெழுப்புவது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

விவசாய மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளை தடையின்றி மேற்கொள்வதற்கு தேவையான வசதிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close