Home / News / குளவிசுட்டான் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு

குளவிசுட்டான் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு

வவுனியா குளவிசுட்டான் அன்னையன் தேவன்குள பகுதியில் நிலத்தில் புதையுண்ட நிலையில் காணப்பட்ட வெடிபொருட்கள் விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியிலுள்ள அன்னையன் தேவன் குள புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வந்த நிலையில் நிலத்தில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பது அவதானிக்கப்பட்டு கனகராயன்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர், இராணுவத்தினர் வெடிக்காத நிலையில் காணப்பட்ட 80 வகையை சேர்ந்த 16 மோட்டார் செல்களையும் மீட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் மேலும் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் நீதிமன்ற உத்தரவுடன் குறித்த பகுதியை ஆழப்படுத்தி இன்று தேடுதல் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரி கடமைகளை பொறுப்பேற்றார்

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.  இவர் இலங்கை இராணுவத்தின் 55ஆவது …