Home / Corona / மக்களின் நலனுக்காக இறந்த மகளின் சடலத்தைக் கூட பார்க்க மறுத்த தந்தை

மக்களின் நலனுக்காக இறந்த மகளின் சடலத்தைக் கூட பார்க்க மறுத்த தந்தை

சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்ட தந்தை தனது சிறிய மகள் உடல்நலக்குறைவால் இறந்தநிலையிலும் அவரது சடலத்தை பார்க்க வீட்டிற்கு வர மறுத்துள்ளார்.

இந்த சம்பவம் அவிசாவளையில் இடம்பெற்றுள்ளது.

தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்ட தந்தை பேருந்து சாரதியாக பணிபுரிந்து வருகிறார்.இந்தநிலையில் அவர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள கைவிடப்பட்ட வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இவரது மகள் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில் உயிரிழந்துள்ளார். இதனை அவரிடம் தெரிவித்த போது மக்களின் நலன்சார்ந்து தனது மகளின் சடலத்தை பார்க்க மறுப்புத் தெரிவித்துள்ளார்.

எனினும் பின்னர் அவர் மகளின் கல்லறையை சென்று பார்த்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Check Also

ஆசிரியர் ஏசியதால் தூக்கில் தொங்கிய சிறுமி !

ஆசிரியர் வினாத்தாள் செய்யவில்லை என பேசியதால் வாழ விருப்பமில்லை என 15 வயது சிறுமி கடிதம் எழுதிவைத்து விட்டு தூக்கில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *