News

மாஸ்டர் படத்தின் முதல் சண்டைக்காட்சி இது தான், விஜய்யே ஆச்சரியப்பட்டு பார்த்தாராம்!

தளபதி விஜய் தற்போது லோகேஷ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது டப்பிங் பணிகளும் முடிவடையும் நிலையில் உள்ளது.

இப்படம் கொரோனா பாதிப்பு குறைந்தால் சொன்ன தேதியில் ஏப்ரல் 9ம் தேதி படம் திரைக்கு வந்துவிடும் என அடித்துக்கூறி வருகின்றனர்.

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் விஜய் கல்லூரி ஆசிரியராக நடித்து வருவது அனைவரும் அறிந்ததே, சமீபத்தில் கூட ஜான் துரைராஜ் என்று விஜய் பயன்படுத்தும் ஐடி கார்ட் வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து இப்படத்தில் பல இளைஞர்கள் குறிப்பாக யு-டியுப் பிரபலங்கள் பலரும் கல்லூரி மாணவர்களாக நடித்துள்ளனர்.

இதில் பல கேங் உள்ளதாம், அதில் ஒரு கேங்-இல் இருப்பவர் நடிகர் ப்ரவீன் குமாராம், இவர் விஜய்யுடன் சண்டைப்போடும் காட்சி ஒன்று உள்ளதாம்.

இந்த சண்டைக்காட்சி சென்னை மெட்ரோ ரயிலை 3 மணி நேரம் வாடகைக்கு எடுத்து எடுத்தார்களாம்.

இது தான் படத்தின் முதல் சண்டைக்காட்சி என்று அவர் கூறியுள்ளார், அதோடு, விஜய் இதுவரை மெட்ரோவில் சென்றதே இல்லையாம்.

அதனால், படப்பிடிப்பிலேயே குழந்தை போல் மெட்ரோ ரயிலில் நடந்து சென்று சென்னை செம்ம அழகாக உள்ளது என்று கூறிக்கொண்டே இருந்ததாக தெரிவித்துள்ளார், அதன் முழுப்பேட்டியை பார்க்க, இதோ…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close