Home / Corona / யானைக்கு அடுத்தது கர்ப்பிணிப்பசு ! தொடரும் மனிதர்களின் மனிதாபிமானமற்ற செயல்!

யானைக்கு அடுத்தது கர்ப்பிணிப்பசு ! தொடரும் மனிதர்களின் மனிதாபிமானமற்ற செயல்!

கேரளாவில் கர்ப்பிணி யானை ஒன்று அன்னாசிப்பழத்தை பசியால் சாப்பிடும் போது, அதில் இருந்த வெடி மருந்து வெடித்த சம்பவம் அனைவரையும் உலுக்கிய நிலையில், தற்போது அதே போன்று கர்ப்பிணி பசு மாட்டிற்கு நடந்துள்ள சம்பவம் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு, கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில், கர்ப்பிணி யானை ஒன்று பசியால் அலைந்து திரிந்த போது, அது சாப்பிட்ட அன்னாசிப்பழத்தில் வெடிமருந்து இருந்ததால் யானை பரிதாபமாக இறந்தது.

இதற்கு காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை இன்றும் வலுத்து வருகிறது. இந்த விவகாரமே இன்னும் முடிவுக்கு வரமால் இருக்கும் நிலையில், கர்ப்பிணி பசு ஒன்றிற்கு கோதுமை மாவில் வெடிகுண்டு வைத்து கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யானை மாதிரியே இப்பசுவிற்கும் உணவு பொருளில் வெடிகுண்டு வைத்துள்ளனர். அந்த யானையை போலவே உணவை சாப்பிட வந்தபோது, வெடி வெடித்து ஒரு பசுவின் வாய் படுகாயமடைந்துள்ளது. இந்த சம்பவம் இந்தியாவில் இமாச்சல பிரதேசத்தில் நடந்துள்ளது.

கடந்த மே 26-ஆம் திகதி ஒரு கர்ப்பிணி பசு, பசியில் கோதுமை மாவை சாப்பிட்டுள்ளது. அதை சாப்பிட்டதுமே பசுவின் வாய் வெடித்து ரத்தம் கொட்ட தொடங்கி உள்ளது.

இதை பார்த்து கொதித்து போன மக்கள், இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் கோதுமை மாவில் யார் வெடிகுண்டை வைத்தது யார் என தெரியவில்லை எனவும், பக்கத்து வீட்டுக்காரர்தான் இந்த காரியத்தை செய்திருக்க கூடும் என்றும், வெடிபொருட்களால் நிரப்பப்பட்ட கோதுமை மாவினை அவர்தான் பசுவுக்கு தந்திருப்பார் என்றும் பசுவின் உரிமையாளர் வேதனையுடன் கூறியுள்ளார்.

Check Also

நாடாளுமன்றத் தேர்தல் பற்றி தீர்மானிக்க திங்கட்கிழமை ஆணைக்குழு கூடி முடிவு !

பொதுத்தேர்தலுக்கான திகதியைத் தீர்மானிக்கவும், தேர்தலுக்கான அடுத்தகட்ட ஆயத்தங்கள் குறித்து ஆராயவும் நாளை திங்கட்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் …