Lifestyle

COVID-19: சுத்தமாக இருக்கிறேன்னு நீங்கள் செய்யும் தவறுகள் என்னென்ன தெரியுமா? இனி இத செய்யாதீங்க

பெரும்பாலான பெண்கள் வறண்ட சருமம் என்பது தாங்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனை என்று கூறுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 42% பெண்கள் இதற்கான தீர்வை நோக்கி தங்கள் பணத்தை செலவிடுகின்றனர். ஆனால் பெண்களுக்கு அழகு சாதனப் பொருட்களை எவ்வாறு பாதுகாப்பான முறையில் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த புரிதல் வேண்டும். உதாரணத்திற்கு, களிமண் மாஸ்க் பயன்படுத்தும்போது சில விதிகள் பின்பற்றப்பட வேண்டும் , இதனால் சருமம் மேலும் வறண்டு போகாமல் இருக்க முடியும். சருமப் பராமரிப்பு என்பது வெறும் அழகு சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல, ஆரோக்கியம் சம்பந்தப்பட்டதும் கூட என்பதை மனதில் கொள்ளுங்கள்.

​களிமண் மாஸ்க்

samayam tamil

உங்கள் முகத்தில் இருக்கும் தோல் பகுதி இளமையாக இருக்க மாஸ்க் பயன்படுத்தி பேஷியல் செய்வது நல்லது. ஆனால் அதே நேரத்தில் இந்த மாஸ்க்கை தவறாக பயன்படுத்தும்போது அதுவே முகத்திற்கு தீங்கு உண்டாக்கும். தோல் சிகிச்சை நிபுணர்களின் அறிவுரைப்படி , களிமண் முகத்தில் உள்ள அதிக எண்ணெய்யை உறிஞ்சுகிறது. நீண்ட நேரம் களிமண் மாஸ்க் முகத்தில் இருப்பதால் சருமத்தில் உள்ள எண்ணெய் அதிகமாக உறிஞ்சப்பட்டு வறட்சியை ஏற்படுத்தும்.

நமது குறிக்கோள் முகத்தில் உள்ள அதிக எண்ணெய்யை உறிஞ்சுவது மட்டுமே, முகத்தில் உள்ள மொத்த எண்ணெய்யையும் உறிஞ்சுவது அல்ல . அந்த பொருளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை பரிந்துரையின் அடிப்படையில் பயன்படுத்துங்கள் . முகத்தில் இறுக்கம் தென்படும் 2-5 நிமிடத்தில் முகத்தை கழுவி விடுங்கள் .

​சன் ஸ்க்ரீன்

samayam tamil

அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தும்போது சில குறிப்பிட்ட நிலையை பின்பற்றுங்கள்

உங்கள் வழக்கமான சரும பராமரிப்பு வழிகளை மேம்படுத்த தோல் சிகிச்சை நிபுணர் சில குறிப்புகளை வழங்கியுள்ளார். மென்மையான நிலையை கொண்டுள்ள பொருட்களின் அடிப்படையில் நீங்கள் உங்கள் சரும பராமரிப்பு திட்டத்தை தொடங்க வேண்டும். உதாரணத்திற்கு, முதலில் டோனர், பின்பு சீரம் , பின்பு அம்போல்ஸ் மற்றும் இறுதியாக சன்ஸ்க்ரீன்.

கோடை காலத்தில் மட்டும் அல்லாது எல்லா நாட்களிலும் அதாவது தினமும் சன்ஸ்க்ரீன் பயன்படுத்த வேண்டும். 10-15 நிமிடங்கள் சூரிய ஒளியின் கீழ் நிற்பதும் கூட உங்கள் சருமத்தில் சேதங்களை உண்டாக்க முடியும் மற்றும் வயது முதிர்ச்சியை ஊக்குவிக்கும்.

​ரிலாக்ஸ் செய்யுங்கள்

samayam tamil

வாரத்தில் ஒரு முறையாவது உங்களை தளர்த்திக் கொள்ளுங்கள். இது மிகவும் எளிமையான விதியாக தோன்றலாம் , ஆனால் நம்மில் பலர் நமக்கான ஒரு நேரத்தை ஒதுக்குவதே இல்லை. ஒவ்வொரு வாரமும் ஒரு நாளை நமது உடலும் நமது மனதும் தளர்த்துவதற்கான நேரமாக கேட்கின்றன. வேலை நேரத்தில் உண்டாகும் அழுத்தம் முந்தைய நாட்களை விட தற்போது அதிகரித்து இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன . இதனை 50% தொழிலாளர்கள் அனுபவிக்கின்றனர். இடைவேளை நேரத்தை தவற விடுவது கூட நாட்பட்ட மனஅழுத்ததிற்கு காரணமாக இருக்கலாம்.

வேலை, ஆழமான யோசனை, போன்றவற்றிற்கு ஒரு நாள் விடுப்பு கொடுங்கள். இந்த விடுப்பு நாட்கள் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் . ஏனெனில் இவை உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தி , உங்கள் ஆயுட்காலத்தை அதிகரிக்கும்.

​சூரியக் குளியல்

samayam tamil

சருமத்தில் புதிதாக சிராய்ப்புகள் அல்லது வெட்டுக்கள் காணப்பட்டால் சூரிய குளியலைத் தவிர்த்திடுங்கள். விரைவான வயது முதிர்வை தடுக்க உங்கள் தழும்புகள் அல்லது வெட்டுக்கள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும். நாம் தெரியாமல் சில நேரங்கள் காயம் ஏற்படுத்தி அதன் தழும்புகள் குறித்து மறந்து விடுவோம். ஆனால் அந்த காயத்தால் ஏற்பட்ட தழும்புகள் நீண்ட காலம் நமது உடலில் காணப்படும் . புதிதாக தோன்றிய தழும்புகள் உங்கள் உடலில் இருந்தால் நீங்கள் சூரிய குளியல் எடுத்துக் கொள்ள வேண்டாம். ஒவ்வொரு முறை நீங்கள் வெளியில் செல்லும்போதும் அந்த தழும்பு வெளியில் தெரியும்படி இருந்தால் அதன்மீது சன்ஸ்க்ரீன் தடவிவிட்டு பின்பு வெளியில் செல்லவும். சூரிய ஒளியில் இருந்து தழும்பை பாதுகாப்பதால் அவை பழுப்பு நிறமாவதைத் தடுக்க முடியும். SPF 30 அல்லது அதற்கு மேற்பட்ட சன்ஸ்க்ரீன் பயணப்படுத்தும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

​சாக்லேட் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டாம்

samayam tamil

உங்கள் டயட் காரணமாக சாக்லேட் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டிய கட்டாயம் இருந்தால் உதலில் உங்கள் மனதை மாற்றிக் கொள்ளுங்கள். முதலில் உங்கள் உடல் செயல்படுவதற்கான ஆற்றல் தேவைக்கு சர்க்கரை மிகவும் அவசியம். இரண்டாவது, டார்க் சாக்லேட் என்பது ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டி. கொக்கோவில் உள்ள பிளவனாய்டு என்னும் கூறு இதயத்தை பாதுகாக்க உதவுகிறது. பால் சாக்லெட்டை விட டார்க் சாக்லேட்டில் 2-3 பங்கு அதிகமான பிளவனாய்டு அதிகம் உள்ள கொக்கோ உள்ளது . மேலும் பிளவனாய்டுகள் இரத்த நாளங்களை தளர்த்தி , இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது. சாக்லெட் சாப்பிட்டா குண்டாகிடுவனு ஒரு வதந்தி இருக்கு. அதில் ஓரளவு உண்மை இருந்தாலும், சர்க்கரை சேர்க்காத டார்க் சாக்லேட் எடுத்துக் கொள்ளலாம்.

​டயட்

samayam tamil

பிரபலமான டயட் முறைகளை வழிகாட்டியாக வைத்துக் கொள்ள வேண்டாம். ஒரு புதிய டயட் முறை பிரபலமாக இருந்தால் உடனே அதனை 100% உண்மை என்று கருத வேண்டாம். அதன் ஊட்டச்சத்துகள் குறித்து மற்றும் அவை எவ்வாறு வேலை செய்கிறது என்பதையும் பரிசோதியுங்கள். மேலும் ஒவ்வொரு உடலும் தனித்தன்மை வாய்ந்தது. ஒருவருக்கு நல்லதாக இருக்கும் ஒன்று மற்றவருக்கு தீமையை உண்டாக்கக்கூடும். புதிதாக யாராவது முயற்சி செய்து நல்லா இருக்குனு சொல்லிட்டா உடனே அத ஃபாலோ பண்ண ஆரம்பிச்சிடறோம். அது மிகப்பெரிய தவறு.

​விதவிதமான ஹீல்ஸ்

samayam tamil

உங்கள் கால் மற்றும் பாதங்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஒவ்வொரு முறையும் வெவ்வேறு விதமான ஹீல்ஸ் உள்ள காலணிகளை பயன்படுத்தும்படி மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். தட்டையாக இருக்கும் காலணிகள் அணிவதால் உங்கள் கெண்டைக்கால் தசைகள் நீளமாகின்றன. அதனால் அதனைத் தவிர்க்க வேண்டும். உயரமான ஹீல்ஸ் கொண்ட காலணிகள் அணிவதால் உங்கள் கெண்டைக்கால் தசைகள் சுருங்குகின்றன. ஹெீல்ஸ் அணியும் பழக்கம் உள்ளவர்கள் எப்போதும் ஒரே மாதிரியான அளவில் ஹீல்ஸ் அணிந்து கொள்வது வழக்கம். ஆனால் அதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். வெவ்வேறு விதமான ஹீல்ஸ்களை அணிய வேண்டும் என்கிறார்கள்

​அக்குள் சுத்தம்

samayam tamil

அக்குள் பகுதிகளை எக்ஸ்போலியேட் செய்யுங்கள். உங்கள் முகம், கால், கை போன்றவற்றை தளர்த்துவது போல் அக்குள் பகுதியையும் தளர்த்திக் கொள்ளுங்கள். வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை இப்படி செய்வதால் புதிய அணுக்கள் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டு துளைகளில் உள்ள அடைப்புகள் நீக்கப்படுகின்றன. அக்குள் பகுதி சருமம் மிகவும் மென்மையானது என்பதால் மிகவும் மென்மையாக இதனை தளர்த்துவது அவசியம்.

​ஞாபக சக்தி

samayam tamil

ஞாபக சக்தியை அதிகரிக்க படித்தவுடன் உடற்பயிற்சி செய்யுங்கள். உங்கள் ஞாபக சக்தியை மேம்படுத்த, படித்து முடித்த பின்னர் உடற்பயிற்சி செய்வது நல்லது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதாவது இதற்கான கால அளவையும் விஞ்ஞானிகள் நிர்ணயித்துள்ளனர் . அது 4 மணிநேரம் . படித்த பிறகு 4 மணி நேரம் உடற்பயிற்சி செய்தவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் நீண்ட காலம் அந்த தகவலை தக்க வைத்திருந்ததாக ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. ஆனால் நீங்கள் அவ்வளவு நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் முக்கியமான செய்தி என்னவென்றால் உடல் செயல்பாடு மற்றும் நல்ல ஞாபக சக்தி ஆகியவை ஒன்றுடன் ஒன்று தொடர்பு உள்ளவை.

​சமூகத் தொடர்பு

samayam tamil

சமூகத்தில் இருந்து விலகி இருப்பதை தவிர்ப்பதால் இளமையுடன் இருக்கலாம். நண்பர்கள் இல்லாதவர்கள் மற்றும் சமூகத்துடன் தொடர்பு இல்லாதவர்கள் விரைவில் வயது முதிர்வை தன்வசப்படுத்திக் கொள்கின்றனர். வாரத்திற்கு ஒருமுறை எங்காவது வெளியில் சென்று வாருங்கள். இதனால் உங்கள் மனநிலை, ஆரோக்கியம், செயல்திறன் ஆகியவை மேம்படும் மற்றும் இளம் வயதில் வயது முதிர்வு தடுக்கப்பட உதவும். அதிலும் தற்போதைய கொரோனா தொற்று பரவிக் கொண்டிருக்கிற நிலையில், சமூகத் தொடர்பை நேரடியாக வைத்துக் கொள்வதைத் தவிர்த்துவிட்டு, தொலைபேசி, சமூக வலைத்தளங்களில் உறவாடுங்கள்.

​தூக்கம் இல்லாமல் இருந்தால் அதிகம் தண்ணீர் பருகுங்கள்

samayam tamil

6 மணி நேரம் அல்லது அதற்கு குறைவாக தூங்குபவர்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு உண்டாகும் அபாயம் 59% இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன . எனவே ஒருநாளில் 7 முதல் 8 மணிநேரம் தூங்க முடியாமல் இருப்பவர்கள் நீர் சமநிலை பெறுவதற்காக அதிக தண்ணீர் பருகுங்கள்.

உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நீங்கள் எந்த விதியை பின்பற்றுகிறீர்கள்?

நீங்கள் உங்கள் உடலை ஆரோக்கியமாக பராமரிக்க ஏதேனும் ரகசிய வழியை பின்பற்றினால் அதனை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close