அட பாவிகளா.. இப்படியா நாமினேட் பண்ண சொல்வீங்க.. மாறி மாறி போட்டோக்களை எரித்துக்கொண்ட ஹவுஸ்மேட்ஸ்!

அட பாவிகளா.. இப்படியா நாமினேட் பண்ண சொல்வீங்க.. மாறி மாறி போட்டோக்களை எரித்துக்கொண்ட ஹவுஸ்மேட்ஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நாமினேஷன் புராசஸ் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் திங்கள் கிழமை நாமினேஷன் புராசஸ் நடைபெறுகிறது.

இதில் தங்களுக்கு பிடிக்காத தலா இரண்டு போட்டியாளர்களை ஒவ்வொரு ஹவுஸ்மேட்டும் நாமினேட் செய்ய வேண்டும்.

ரகசிய நாமினேஷன்

ரகசிய நாமினேஷன்

அந்த வகையில் பிக்பாஸின் இன்றைய எபிசோடில் நடைபெற்ற நாமினேஷன் பலரையும் பதை பதைக்க வைத்துள்ளது. வழக்கமாக பிடிக்காத போட்டியாளர்களை பிக்பாஸ் அழைப்பின் பேரில் கன்ஃபெஷன் ரூமிற்கு அழைத்து சென்று ரகசியமாக நாமினேட் செய்வார்கள் ஹவுஸ்மேட்ஸ்.

தப்பித்த அர்ச்சனா

தப்பித்த அர்ச்சனா

ஆனால் இம்முறை கார்டன் ஏரியாவில் நாமினேஷன் புராசஸ் நடைபெற்றது. அர்ச்சனா இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக உள்ளதால் அவர் நாமினேஷனில் இருந்து தப்பித்துள்ளார்.

2 பேர் நாமினேஷன்

2 பேர் நாமினேஷன்

நாமினேஷனின் படி கார்டன் ஏரியாவில் அர்ச்சனா தவிர்த்து எஞ்சிய 15 போட்டியாளர்களின் போட்டோக்கள் தனித்தனி பெடஸ்டன்ட்களில் வைக்கப்பட்டிருந்தது. அதில் ஒவ்வொரு ஹவுஸ்மேட்டும் தாங்கள் நாமினேட் செய்யும் தலா இரண்டு போட்டியாளர்களின் போட்டோக்களை எடுத்து நாமினேட் செய்ய வேண்டும்.

நெருப்பில் போட்டு எரித்தனர்

நெருப்பில் போட்டு எரித்தனர்

நாமினேட் செய்வதற்கான காரணத்தை சொல்லி ஹவுஸ்மேட்டுகளின் போட்டோக்களை அருகில் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் போட வேண்டும் என்றார் பிக்பாஸ். அதன்படி போட்டியாளர்கள் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் தாங்கள் நாமினேட் செய்த போட்டியாளர்களின் போட்டோக்களை போட்டு எரித்தனர்.

பதறிய பார்வையாளர்கள்

பதறிய பார்வையாளர்கள்

பார்க்கவே நெகட்டிவாக இருந்த இந்த நாமினேஷன் புராசஸை பார்த்த பார்வையாளர்கள் பதறி விட்டனர். ஏன்டா உயிரோட இருக்குறவங்க போட்டோக்களை போட்டு எரிக்கிறீர்கள் என்றும் இது நல்லதுக்கு இல்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *