‘அர்ச்சனா ஒரு பெரிய தலைவலி’ என கூறிய போட்டியாளர் யார்?

‘அர்ச்சனா ஒரு பெரிய தலைவலி’ என கூறிய போட்டியாளர் யார்?

சமீபத்தில் வைல்டுகார்ட் போட்டியாளராக உள்ளே வந்த அர்ச்சனா மற்ற போட்டியாளர்களுக்கு சவாலான போட்டியாக இருப்பார் என கருதப்படுகிறது. இந்த நிலையில் அர்ச்சனா உள்ளே வந்ததும் ஒரு பெரிய தலைவலியாக இருப்பார் என போட்டியாளர்களில் ஒருவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்சீன் காட்சிகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் சற்றுமுன் வந்த அன்சீன் காட்சியில், ‘பாலாஜி, அறந்தாங்கி நிஷா, அர்ச்சனா, சோம்சேகர், ரியோ ஆகியோர் பேசிக்கொண்டிருக்கும் காட்சிகள் உள்ளன. அதில் பாலாஜி எழுந்து சென்ற உடன் அவரைப் பற்றிய பேச்சு வருகிறது.

அப்போது அர்ச்சனா கூறியபோது ’நான் முதன்முதலாக உள்ளே வந்தபோது என்னை சரியாக வரவேற்காத ஒரே நபர் பாலாஜிதான். ஒரு சவாலான போட்டியாளர் வந்து விட்டார் என்றும் ஒரு பெரிய தலைவலியாக இருக்கப்போகிறார் என்றும் என்று திரும்பத் திரும்ப இரண்டு முறையும் கூறியது பாலாஜிதான். ஆனால் போகப் போக எல்லாம் சரியாகிவிடும்’ என்று அர்ச்சனா கூறினார்.

தன்னை ஒரு பெரிய தலைவலி என பாலாஜி கூறியதாக அர்ச்சனா கூறியுள்ளது சக போட்டியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *