ஆரியின் நேர்மைக்கு கிடைத்த பரிசு.. அர்ச்சனா ரியோ முகத்த பாக்கனுமே.. அப்பப்பா.. என்னா முழி!

ஆரியின் நேர்மைக்கு கிடைத்த பரிசு.. அர்ச்சனா ரியோ முகத்த பாக்கனுமே.. அப்பப்பா.. என்னா முழி!

ஆரியின் நேர்மைக்கு கிடைத்த பரிசை நடிகர் கமல் பிக்பாஸின் மூன்றாவது புரமோவில் அறிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோவில் ஆரியின் ஆருடம் பலிக்குமா என்று கேட்டார் கமல்.

அதனை தொடர்ந்து இரண்டாவது புரமோவில் செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத்தின் பிக்பாஸ் வீட்டு டிராமாவை வைத்து கலாய்த்தார்.

ஆரின்னு வச்சுக்கிட்டு..

ஆரின்னு வச்சுக்கிட்டு..

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் ஆரியை டார்கெட் செய்திருக்கிறார் கமல். பேரை ஆரின்னு வச்சுக்கிட்டு இவ்ளோ சூடாயிடுறீங்களே சொல்லனும்னு தோனுது எனக்கு என்கிறார் கமல்.

நேர்மையா விளையாடினீங்க..

நேர்மையா விளையாடினீங்க..

மேலும் தொடர்ந்து பேசும் கமல், நாடா காடா டாஸ்க்கில் ஆரஞ்சு தோல் பிழிந்ததில் நீங்கள் நேர்மையாதான் விளையாடுனீங்க. நீங்க கொஞ்சம் அவசரப்பட்டு விட்டுட்டீங்க..நேர்மையா விளையாடுறத இந்த காலத்துல எடுபடாதுன்னு சொல்றத ஒத்துக்கொள்ளவே மாட்டேன் நான்.

சேவ் ஆயிட்டீங்க

சேவ் ஆயிட்டீங்க

ஏன்னா நேர்மையா இருக்குறதுக்கான பரிசு நிச்சயமா கிடைக்கும். நேர்மை வெல்லும் என்பதற்கு உதாராணம், நீங்க இந்த வாரம் சேவ் ஆயிட்டீங்க என்று கூறி முடிக்கிறார் கமல். இப்படியாக முடிகிறது மூன்றாவது புரமோ.

திருட்டு முழி

திருட்டு முழி

கமல் நேர்மை குறித்து பேசும் போது, ரியோவும் அர்ச்சனாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர்.

ரியோ திருட்டு முழி முழிக்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள், ரியோ அன்ட் கோவுக்கு கிடைத்த செருப்படி இது விளாசி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *