இனிமே எனக்கு என்ன? என வசனம் பேசிய அர்ச்சனா.. டார் டாராய் கிழித்து தொங்கவிட்ட பிரபல நடிகை!

இனிமே எனக்கு என்ன? என வசனம் பேசிய அர்ச்சனா.. டார் டாராய் கிழித்து தொங்கவிட்ட பிரபல நடிகை!

கமல் விட்ட டோஸை தொடர்ந்து இனிமே எனக்கு என்ன என வசனம் பேசிய அர்ச்சனாவை சீனியர் நடிகை ஒருவர் கிழித்து தொங்க விட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்ட் என்ட்ரியாக பங்கேற்றிருப்பவர் விஜே அர்ச்சனா.

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் விஜேவான அவர் பல சர்ச்சைகளுக்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

சொம்படிக்கும் அர்ச்சனா

சொம்படிக்கும் அர்ச்சனா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது முதலே விஜய் டிவியை சேர்ந்த போட்டியாளர்களுடன் கொஞ்சி குலாவி வருகிறார். குறிப்பாக ரியோ, நிஷா மற்றும் வேல்முருகனுக்கு சொம்படித்து வருகிறார்.

பிக்பாஸ் என நினைப்பு

பிக்பாஸ் என நினைப்பு

அதோடு தான்தான் பிக்பாஸ் என்று நினைத்துக் கொண்டு அதிகாரம் செலுத்தி வருகிறார் அர்ச்சனா. நாடா காடா டாஸ்க்கின் போது சுரேஷ் சக்கரவர்த்தி செங்கோலால் சனம் ஷெட்டியை தட்டியது பெரும் பிரச்சனையானது.

ராஜமாதாவாக ட்ரை

ராஜமாதாவாக ட்ரை

அப்போது குரலை உயர்த்திய அர்ச்சனா, மன்னிப்பு கேளுங்க, நீங்க செய்தது தவறு என சுரேஷ் சக்கரவர்த்தியை அதட்டினார் அர்ச்சனா. அதனை பார்த்த நெட்டிசன்கள் நிஜமாவே ராஜமாதவாக அர்ச்சனா ட்ரை பண்ணுவதாக விளாசி விட்டனர்.

போட்டியாளரா தொகுப்பாளரா?

போட்டியாளரா தொகுப்பாளரா?

யார் யார் என்னென்ன செய்ய வேண்டும் என பிக்பாஸை போல் உத்தரவு போட்டு வருகிறார் அர்ச்சனா. இதனையும் கண்டித்த நெட்டிசன்கள், அர்ச்சனா பிக்பாஸ் போட்டியாளரா அல்லது தொகுப்பாளரா என கடுமையாக விமர்சித்தனர்.

ஆங்கரிங் பண்ண வேண்டாம்

ஆங்கரிங் பண்ண வேண்டாம்

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ஹவுஸ் மேட்ஸ்களை சந்தித்த கமல் அர்ச்சனாவை கடுமையாக கண்டித்தார். முதலில் உங்களை பாருங்கள், உங்கள் விளையாட்டை விளையாடுங்கள் என்று வார்னிங் கொடுத்தார். மேலும் நீங்கள் ஆங்கரிங் பண்ண வேண்டாம் என்றும் கூறினார்.

பெரும் அவமானம்

பெரும் அவமானம்

இது அர்ச்சனாவுக்கு பெரும் அவமானமாகிவிட்டது. இனிமேல் என்ன நடந்தாலும் நான் தலையிடப் போவதில்லை என விரக்தியில் தனது கூட்டாளிகளிடம் புலம்பி தீர்த்தார். நேற்றைய எபிசோடிலும் இனிமேல் எனக்கு என்ன என்று நிஷாவிடன் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

இனிமே எனக்கு என்ன?

இனிமே எனக்கு என்ன?

தொடர்ந்து பேசிய அர்ச்சனா, இனிமே எனக்கு என்ன? உனக்கு, ரியோவுக்கு வேலுவுக்கு ஏதாவது என்றால் மட்டுமே வருவேன் என்றார் அர்ச்சனா. அவரது பேச்சில் அவர்கள் 4 பேரும் ஒரு குரூப் என்பதை அப்பட்டமாக தெரிந்தது.

இதற்கு பெயர் என்ன?

இதற்கு பெயர் என்ன?

இந்நிலையில் இதனை கவனித்த நடிகை ஸ்ரீபிரியா, அர்ச்சனாவை கிழித்து தொங்கவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், பிக்பாஸில் யாரோ ஒருவர் இனிமே எனக்கு என்ன? உனக்கு( நிஷா) ரியோவுக்கு, வேலுவுக்கு ( ஒரு பெயரை மறந்துவிட்டேன்) ஏதாவதுன்னா மட்டும் தான் வருவேன் (கரெக்ட்டான வார்த்தைகள் அல்ல ஆனால் இதுதான் பொருள்) ஆம் என்றால் இது என்னவேன்று அழைக்கப்படுகிறது? இது விவாதிக்கப்படாவிட்டால் என்னைத் திருத்துங்கள் என கூறியுள்ளார்.

அர்ச்சனா பேசியதன் அர்த்தம்

அர்ச்சனா பேசியதன் அர்த்தம்

பிக்பாஸ் வீட்டில் ரியோ குரூப்பிஸமே இல்லை என கூறி வரும் நிலையில் தங்கள் 4 பேரை மட்டும் குறிப்பிட்டு அர்ச்சனா பேசியிருப்பதன் அர்த்தம் என்ன என கேட்டுள்ளார். இதுதான் குரூப்பிஸம் என்று மறைமுகமாக கூறியிருக்கிறார் ஸ்ரீபிரியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *