சனம் ரொம்ப சீட் பண்ணிட்டா.. கடுப்பான ரம்யா பாண்டியன்.. தீயில் போட்டு கொளுத்தி ஓப்பனா உடைச்சிட்டாரு!

சனம் ரொம்ப சீட் பண்ணிட்டா.. கடுப்பான ரம்யா பாண்டியன்.. தீயில் போட்டு கொளுத்தி ஓப்பனா உடைச்சிட்டாரு!

முதல்முறையாக விஜயதசமியை முன்னிட்டு 4 மணி நேரம் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்ச்சியாக நடப்பதே, ரசிகர்களுக்கு கொண்டாட்டமான விஷயம் தான்.

அன்சீன் எல்லாம் எதுக்கு, மொத்தத்தையும் டெலிகாஸ்ட் பண்ணுகிறோம் என களமிறங்கிட்டாங்க பிக் பாஸ் குழு.

ஆனால், ஆரம்பத்திலேயே சுவாரஸ்யம் இருக்கணுமே, அதுக்காக, நாமினேஷன் சண்டையையும் வச்சி நிஜமாவே கொளுத்திப் போட வச்சிட்டாரு பிக் பாஸ்.

போட்டோவை எரிக்கணும்

போட்டோவை எரிக்கணும்

நாமினேட் செய்யும் நபர்களை காரணத்துடன் சொல்லி, தீயில் அவங்களோட போட்டோவை எல்லாம் போட்டு எரித்து, கமல் சொன்னதை எல்லாம் மீற் அடி தடி சண்டைக்கு விதை போட்டுருக்கார் பிக் பாஸ். பிக் பாஸ்ன்னா சண்டையை மூட்டி விடுறதும் கமல்ன்னா சண்டையை சமாதானம் பண்ணுவதுமாக நிகழ்ச்சி மாறிவிட்டது.

ரொம்ப சந்தோஷமாக

ரொம்ப சந்தோஷமாக

அடுத்தவன் போட்டோவை எரிக்கணுமா, டாஸ்க்குனா சொல்லுங்க அவனையே தீயில போட்டு எரிச்சுடுறேன்னு, எந்த ஒரு எதிர்ப்பு கேள்விகளும் கேட்காம தலையாட்டி பொம்மைகளாக ரொம்பவே சந்தோஷமாக, ரீசன்களை சொல்லி ஹவுஸ்மேட்ஸ் அவங்களுக்கு பர்சனலா புடிக்காதவங்க போட்டோக்களை தீயில் போட்டு எரிச்சாங்க.

சீட்டிங் பண்ண சனம்

சீட்டிங் பண்ண சனம்

சனம் ஷெட்டியின் போட்டோவை முதல் ஆளாக எரித்த ரம்யா பாண்டியன், அதற்காக சொன்ன காரணத்தை கூட, சுரேஷ் சக்கரவர்த்தி சொல்லாதது ரசிகர்களை ரொம்பவே ஆச்சர்யப்படுத்தியது. சனம் ஷெட்டியின் பிளான் தெரியாமல் தாத்தாவை தப்பா நினைச்சிட்டேன் ரொம்ப சீட் பண்ணிட்டா என்றார்.

மண்டையில் அடித்த சண்டை

மண்டையில் அடித்த சண்டை

நாடா காடா டாஸ்க்கின் போது, அரக்கியாக இருந்த சனம் ஷெட்டியை, அரசனாக இருந்த சுரேஷ் தாத்தா, தனது செங்கோல் கொண்டு அடித்தது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. சனம் ஷெட்டி, இதுதான் சமயம் என அவரை வெளியே வாடா என வாடா போடான்னு பேசி தனது வஞ்சத்தை தீர்த்துக் கொண்டார்.

நம்பி ஏமாந்த ரம்யா

நம்பி ஏமாந்த ரம்யா

சனம் ஷெட்டி ஏற்கனவே பிளான் போட்டது தெரியாமல், அர்ச்சனா வந்து கேட்டதும், என்னையும் தாத்தா அடித்தார் என பேசினார். சனம் ஷெட்டி ஏற்கனவே வேல்முருகனிடம் பேசி பிளான் போட்ட பின்னரே தாத்தா சுரேஷை அவர் திட்டிய விஷயம் தெரிந்த உடன் தற்போது சனம் ஷெட்டியின் புகைப்படத்தை ரம்யா எரித்தார்.

எரியுமா எரியாதா

எரியுமா எரியாதா

இப்படி 11 பேரை நாமினேஷன் செஞ்சுருக்காங்கன்னு தெரிந்த பிறகு, ஒவ்வொருத்தருக்கும், எல்லாரும் நம்ம போட்டோவை போட்டு எரிச்சாங்கன்னு தெரிஞ்சா எல்லாருக்கும் எரியுமா? எரியாதா? நிச்சயம் இதனால், பிக் பாஸ் ஹவுஸில் சீக்கிரமே பிரச்சனை கொளுந்து விட்டு எரியும் வாங்க இன்னைக்கு விஜயதசமி பொரி கடலை சாப்பிடுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *