சுரேஷுக்கு ஹார்ட் கொடுத்த பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்!

சுரேஷுக்கு ஹார்ட் கொடுத்த பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் முதலில் அனைத்து போட்டியாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் வில்லனாக தெரிந்தவர் சுரேஷ் சக்கரவர்த்தி. அனிதா சம்பத்துடன் எச்சில் விவகாரம், ரேகாவுடன் மோதல், ரம்யா பாண்டியனுடன் தந்திரமாக விளையாடியது, ரியோவுடன் வாக்குவாதம், வேல்முருகனுடன் வேஷ்டி விவகாரம் உள்பட அனைத்தையும் பார்க்கும் போது இவர் பலே கில்லாடியாக இருக்கலாம் என்றும், ஆபத்தானவராகவும் இருப்பார் என்றும் மற்ற போட்டியாளர்கள் இவரிடம் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது

ஆனால் நேற்று ஒரே நாளில் தனது வில்லன் முகத்தை மாற்றி விட்டு ஹீரோவாக பதவி உயர்வு பெற்றுவிட்டார். தனது உடல்நிலை சரியில்லாத போதும் மன உறுதியுடன் கேப்ரில்லாவை தனது முதுகில் சுமந்தது அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது ஒட்டுமொத்த பிக்பாஸ் போட்டியாளர்களும் தனக்கு எதிராக இருந்த போதும் கேப்ரில்லாவை கேப்டன்ஷிப் டாஸ்க்கில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அவர் எடுத்துக் கொண்ட முயற்சியால் ஒரே நாளில் அவர் ஹீரோவாகிவிட்டார்

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான கவின், கேப்ரில்லாவை சுரேஷ் முதுகில் சுமக்கும் புகைப்படத்தை பதிவு செய்து அதில் ஹார்ட் எமோஜியையும் பதிவு செய்துள்ளார். இதிலிருந்து கவின், சுரேஷ் சக்கரவர்த்திக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார் என்பதையே எடுத்துக் கொள்ளலாம்

ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் ஒரே நாளில் தனது பக்கம் திருப்பிய சுரேஷ்க்கு கமல்ஹாசன் உள்பட அனைத்து தரப்பினர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அனேகமாக அவர் சீசன் 4 டைட்டிலை வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றே கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *