சுரேஷை திட்ட முன்கூட்டியே ஒத்திகை பார்த்த சனம் ஷெட்டி.. கமலிடம் போட்டுடைத்த வேல்முருகன்!

சுரேஷை திட்ட முன்கூட்டியே ஒத்திகை பார்த்த சனம் ஷெட்டி.. கமலிடம் போட்டுடைத்த வேல்முருகன்!

சுரேஷை கேவலாமாக திட்ட சனம் ஷெட்டி முன்கூட்டியே ஒத்திகை பார்த்ததை வெட்ட வெளிச்சமாக்கிவிட்டார் கமல்.

நேற்றைய எபிசோடில் நாடா காடா டாஸ்க்கில் சுரேஷ் சக்கரவர்த்திக்கும் சனம் ஷெட்டிக்கும் இடையில் நடந்த சண்டை குறித்து விவாதித்தார் கமல்.

அப்போது சுரேஷ் சக்கரவர்த்தி கன்ஃபெஷன் ரூமில் கேவி கேவி அழுததை குறிப்பிட்ட கமல், அவர் செய்த தவறை உணர்ந்துவிட்டதாக கூறினார்.

ஒத்திகை பார்த்த சனம்

தொடர்ந்து சனம் ஷெட்டியிடம் பேசிய கமல், நீங்கள் வருத்தம் தெரிவித்தாலுமே உங்கள் மீது எனக்கு சந்தேகம் உள்ளது. நீங்கள் என்ன பேசப் போகிறீர்கள் என்பதை ஏற்கனவே ஒத்திகை பார்த்து விட்டிர்கள் என்று மொத்தத்தையும் போட்டு உடைத்து விட்டார்.

குறுக்கிட்ட வேல்முருகன்

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த சனம், நான் சுரேஷை பேசிய பிறகுதான் வேல்முருகனிடம் அப்படி சொன்னேன் என வாக்குவாதம் செய்தார். அப்போது குறுக்கிட்ட வேல்முருகன் ஆமாம் என நடந்ததை கூறத் தொடங்கினார்.

திட்டும் எண்ணத்தில்

திட்டும் எண்ணத்தில்

ஆனால் அவரை பேசவிடாமல் இடை மறித்தார் சனம் ஷெட்டி. நான் பேசுகிறேன் என்று கூறிய வேல்முருகன், ரம்யாவுடனும் நிஷாவுடனும் அவர் விளையாடியதை பார்த்த சனம் ஷெட்டி, நான் வயதுக்கெல்லாம் மரியாதை கொடுக்க மாட்டேன் போடா வாடா என பேசிவிடுவேன் என்றார் என சனம் திட்டும் எண்ணத்தில் இருந்தது வெளிப்படுத்தினார்.

எக்ஸ்ட்ரீம் லெவலுக்கு

எக்ஸ்ட்ரீம் லெவலுக்கு

இதுதொடர்பாக கமலிடம் விளக்கம் அளித்த சனம் ஷெட்டி, சுரேஷ் சக்கரவர்த்தியை திட்ட வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிடவில்லை என்றார். மேலும் ஏற்கனவே தனக்கும் சுரேஷ் சக்கரவர்த்திக்கும் பிரச்சனை இருந்ததால் தான் எக்ஸ்ட்ரீம் லெவலுக்கு போய்விட்டதாக கூறியதாகவும் கூறினார்.

ஏற்கனவே காயப்பட்டிருந்தேன்

ஏற்கனவே காயப்பட்டிருந்தேன்

மேலும் இரண்டு வாரங்களாக சுரேஷ் சக்கரவர்த்தி தன்னை இந்த நிகழ்ச்சியில் தொடர வேண்டாம் என்றும் தான் எலிமினேட் ஆக வேண்டும் என்ற நோக்கத்திலும் நடந்து கொண்டார். இதனால் தான் ரொம்பவே ஹர்ட்டாகி இருந்ததால் அப்படி பேசி விட்டேன்.

கோபத்தின் வெளிப்பாடு

கோபத்தின் வெளிப்பாடு

இதுவே சுரேஷ் செய்ததை வேறு யாராவது செய்திருந்தால் தான் அந்தளவுக்கு ரியாக்ட் செய்திருக்க மாட்டேன் என்றும் வெளிப்படையாக கூறினார் சனம் ஷெட்டி. ஏற்கனவே அவர் மீதிருந்த கோபத்தின் வெளிப்பாடு தான் அன்று அப்படி வெடித்து வெளியே வந்து விட்டது என்று கூறினார் சனம் ஷெட்டி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *