பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 12 நாட்கள் ஆகிவிட்ட போதிலும் இன்னும் இந்த நிகழ்ச்சியில் இருக்கின்றோமா இல்லையா என்று தெரியாமலேயே நான்கைந்து போட்டியாளர்கள் உள்ளனர். ஆனால் முதல் நாளிலிருந்து பாசிட்டிவ்வோ, நெகட்டிவ்வோ தன்னுடைய பெயரும் வீடியோவும் அனைத்து புரமோவிலும் வரும்படி பார்த்துக் கொண்டிருக்கும் ஒரே போட்டியாளர் சுரேஷ் சக்ரவர்த்தி மட்டுமே.
ஆரம்பத்தில் நெகட்டிவ் கமெண்ட்ஸ்களை பெற்று வந்த சுரேஷ் சக்ரவர்த்தி நேற்று முதல் பாசிட்டிவ் கமெண்ட்டுகளையும் பெற்று ஹீரோவாகிவிட்டார். பிக்பாஸ் போட்டியாளர்களில் வயதானவராக இருந்தாலும் சவாலான போட்டியாளர் உண்மையில் சுரேஷ் சக்கரவர்த்தி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சுரேஷை சமீபத்தில் வந்த அர்ச்சனா அவமதிக்கும் வகையில் பேசியிருப்பது குறித்து நடிகர் திலகம் சிவாஜியின் பேரன் சிவக்குமார் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிட்ட தகவல்கள் சுரேஷ் சக்கரவர்த்தியின் இன்னொரு ஆச்சரிய முகத்தை தெரிவிக்கின்றது.
சன் டிவி எம்டி கலாநிதி மாறன் அவர்களிடம் நேரடியாகப் பேசும் அளவுக்கு அதிகாரத்தைப் பெற்று இருந்தவர் சுரேஷ் என்றும் அவர் சன் டிவி நெட்வொர்க்கின் பல முக்கிய பதவிகளில் இருந்தவர் என்றும் குறிப்பாக ’பெப்சி உங்கள் சாய்ஸ்’ நிகழ்ச்சியின் இயக்குனராக இருந்தவர் என்பதும் கூறியுள்ளார். சன் டிவியில் ‘காமெடி டைம்’ நிகழ்ச்சியின் மூலம் தனது வாழ்க்கையை ஆரம்பித்த அர்ச்சனா, அதே சன் டிவியில் அவர் இருந்த இடத்தை அர்ச்சனா நினைத்துப் பார்க்க வேண்டும்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிவாஜி பேரனின் இந்த டுவிட்டர் தகவல் அனைவருக்கும் சுரேஷ் மீது ஒரு மிகப்பெரிய மரியாதையை ஏற்படுத்தியுள்ளது.