தங்கச்சின்னு சொல்லாத ஹர்ட் ஆகுது.. கேபி உனக்கு என்னதாம்மா பிரச்சனை.. பாலாவை அந்த பாடுபடுத்துற?

தங்கச்சின்னு சொல்லாத ஹர்ட் ஆகுது.. கேபி உனக்கு என்னதாம்மா பிரச்சனை.. பாலாவை அந்த பாடுபடுத்துற?

இதுக்கு மேல அந்த எடிட்டர் கேபிக்கும் பாலாவுக்கும் ரொமான்ட்டிக் தீம் போட்டான் மொத டெட் பாடி அவன் தான் என இன்றைய நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை பிக் பாஸ் வீட்டில் என்ன நடந்ததுன்னு பார்த்துட்டு வாங்கன்னு கமல் சார் சொல்லி அனுப்பிச்சாரு.. அங்க பார்த்தா பாலா கேபியை தங்கச்சின்னு கூப்பிட்டு அதகளம் பண்ணி விட்டார்.

ஆனால், கேபிக்கு அது கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என்பது தான் இதில் ஹைலைட்டே!

3வது வாரம்

3வது வாரம்

முதல் வாரம் எவிக்‌ஷன் இல்லை, இரண்டாவது வாரம் ரேகா வெளியே போனாங்க, அர்ச்சனா உள்ளே வந்தாங்க, இப்போ மூன்றாவது வார இறுதிக்கு வந்து விட்டது பிக் பாஸ் நிகழ்ச்சி. ஆஜீத் தான் அவுட் ஆக போகிறார்.. எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் எனும் அந்த அலாவுதீன் பூதத்தை பயன்படுத்தி இந்த வாரம் யாருமே எவிக்‌ஷன் இல்லை என கமல் சொல்வார் என்றே ரசிகர்கள் கருதுகின்றனர். நாளைக்கு தெரிஞ்சுடும்.

சேட்டைக்காரி கேபி

குசும்புக்கார தாத்தா சுரேஷுன்னு ஆரம்பத்தில் சொன்னதில் இருந்தே செம க்யூட்டா விளையாடிட்டு வராரு நம்ம கேபி. பாலாஜி படுத்திருக்கும் போது, ஆஜீத்திடம், இந்த வீட்ல பாலாஜிக்கு ஒரு பொண்ண பிடிச்சிருக்கு, அது யாரு தெரியுமா? எனக் கேட்டு செம சேட்டை செய்கிறார்.

ஷிவானிக்கும் பாலாஜிக்கும் கனெக்‌ஷன்

ஷிவானிக்கும் பாலாஜிக்கும் கனெக்‌ஷன்

உடனே பிக் பாஸ் வீட்டின் குட்டி ஜோசியரான ஆஜீத், ஷிவானி தான என சொன்னதை கேட்ட பிக் பாஸ் ரசிகர்கள், போன எபிசோட்ல தான் சனம் ஷெட்டிக்கும், பாலாஜிக்கும் ஹார்ட்டீன் போட்டா, இப்போ பார்த்தா ஷிவானி கூட பாலாஜியை கனெக்‌ஷன் பண்ணி விடுறாளே கேபி என ரசிகர்கள் குழம்ப ஆரம்பித்து விட்டனர்.

ரெண்டு பொண்ணுங்க தான்

ரெண்டு பொண்ணுங்க தான்

உடனே தூக்கத்தில் இருந்து எழுந்த பாலாஜி, என்ன சொல்றா, என ஆஜீத்திடம் கேட்டு விட்டு, இந்த வீட்டுலயே ரெண்டு பொண்ணுங்க தான் என் வயசோட கம்மி, ஒண்ணு கேபி, இன்னொன்னு ஷிவானி என பாலாஜி பேசும்போது, என்ன ஏன் ஆஜீத் சொல்லல என கேபி ஓவராக வழிந்தவுடன் சட்டென கேபியை பாலாஜி அந்த வார்த்தையை சொல்லி ஆஃப் பண்ணிட்டார்.

ஏன்னா நீ என் தங்கச்சி

ஏன்னா நீ என் தங்கச்சி

கேபி ரொம்ப ஆர்வமாக கேட்ட போது, பாலாஜி முருகதாஸ், ஏன்னா நீ என் தங்கச்சி என ஒரே போடாக போட்டு கேபியின் ஹார்ட்டை ஒரே அடியாக பிரேக் பண்ணிட்டார். உடனே அதை மறுக்கவும் முடியாமல், ஏற்கவும் முடியாமல் கேபி தவித்ததை பார்த்த ரசிகர்கள், கேபி உனக்கு இப்போ என்னதாம்மா பிரச்சனை, அதான் பாலா தம்பி தங்கச்சின்னு சொல்லிடுச்சுல என டிவிக்கு முன்னாடி கமல் சார் மாதிரி பேச ஆரம்பித்து விட்டனர்.

ஹர்ட் ஆகுது

ஹர்ட் ஆகுது

ஷிவானியை மட்டும் ஏன் தங்கச்சின்னு சொல்லல, என மறுபடியும் நோண்டிய கேபியிடம், அவளை தங்கச்சின்னு கூப்பிட தோணல என பாலா பளிச்சென சொன்ன உடன், தங்கச்சின்னு மட்டும் கூப்பிடாத, ரொம்ப ஹர்ட் ஆகுது, இரிட்டேட்டிங்கா இருக்கு என கத்த ஆரம்பித்து விட்டார் கேபி. சனம் போல கேபியும் பாலாவை ஒன் சைடா லவ் பண்றாரோ.. பிரண்டுன்னு மட்டும் கூப்பிடு போதும் என சொன்ன கேபியிடம், தங்கச்சின்னு தான் கூப்பிடுவேன்னு ஆணித்தரமாக பாலா சொல்லி விட்டார். பாவம் ஆஜீத்.

மேட்சிங் மேட்சிங்

மேட்சிங் மேட்சிங்

சனிக்கிழமை எபிசோடில் கமல் சாரை பார்க்க எல்லாருமே சூப்பரா வழக்கம் போல் டிரெஸ் பண்ணிட்டு உட்கார்ந்திருந்தனர். பாலா மட்டும் பிங்க் கலர் நைட் டிரெஸ் போட்டுக்கிட்டு உட்கார்ந்திருந்தார். பாலாவுக்கு மேட்சிங்கா கேபியும் பிங்க் கலர் கவுனை எடுத்து மாட்டிக் கொண்டு, பக்கத்திலேயே ஒட்டி உரசி உட்கார்ந்திருந்தார். என்னமோ நடக்கப் போகுது.. அந்த கொடுமையையும் பார்ப்போம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *