சனம் ஷெட்டியை தான் அடித்தது மிகப்பெரிய தவறு என ஒப்புக் கொண்டார் சுரேஷ் தாத்தா.
சனம் ஷெட்டிக்கும் சுரேஷ் சக்கரவர்த்திக்கும் இந்த வாரம் நாடா? காடா? டாஸ்க்குல பயங்கர சண்டை நடந்துச்சுல, அதை பத்தி கமல் சார் இன்னைக்கு எபிசோட்ல பேசி பஞ்சாயத்து பண்ணி இரண்டு பேரையும் விளாச போறாரு.. என ஏகப்பட்ட யூடியூப் சேனல்களில் பேசிய பேச்சுக்களை எல்லாம் புஸ் ஆக்கி விட்டார் மொட்டை தல சுரேஷ்.
அவரே ஆரம்பத்திலேயே, நான் பண்ணது தப்புன்னு பஞ்சாயத்து பண்ணுற சீனே இல்லாம பண்ணிட்டார்.
அசத்தல் என்ட்ரி
வழக்கம் போல வீக்கெண்ட் ஆனாலே, கமல் வருகையை எதிர்பார்த்து, எக்கச்சக்க பிக் பாஸ் ரசிகர்கள் ஒரே இடத்தில் ஆஜராகி அந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். சனிக்கிழமை எபிசோடிலும் கமல் வழக்கம் போல தனது அசத்தல் என்ட்ரியை கொடுத்ததை பார்த்த ரசிகர்கள், அவரது டிரெஸ், அவரது லுக் என பலவற்றையும் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
செங்கோல் எங்க போச்சு
புரமோவில் கமல் சார் செங்கோலை வச்சுக்கிட்டு இன்னைக்கு எதைப் பத்தி பேச போகிறேன் என்கிற லீடையும், அரசியல் பற்றியும் பேசி இருந்தார். ஆனால், நிகழ்ச்சியில் அந்த காட்சிகளை கட் பண்ணிட்டாங்க, ஒரு வேளை அது பிரத்யேகமாக புரமோவுக்காக மட்டுமே எடுக்கப்பட்டதா? இல்லை அதையும் அன்சீன்ல வச்சிட்டாரா எடிட்டர்னு தெரியல.
சமரச பேச்சுவார்த்தை
நாடா? காடா? டாஸ்க் வைத்து பிக் பாஸ் சனம் ஷெட்டிக்கும் சுரேஷ் சக்கரவர்த்திக்கும் சண்டையை மூட்டி விட்டார். அந்த சண்டையை வார இறுதி நாட்களில் சமரசம் பண்ணி இருவரையும், கை கொடுத்துக்கோங்க என சொல்ல வைக்கலாம் என நினைத்து வந்த கமலுக்கே நிகழ்ச்சியில் பயங்கர ட்விஸ்ட் இருந்தது ஷாக்கிங்காக மாறியது.
பெரிய தப்பு பண்ணிட்டேன்
சனம் ஷெட்டியை செங்கோல் கொண்டு அடித்து பெரிய தப்பு பண்ணிட்டேன் என ஆரம்பத்திலேயே சுரேஷ் தாத்தா ஒப்புக் கொண்டு, கமல் சாரோட பாதி வேலையை குறைச்சிட்டார். என்னங்க நீங்க, சனம் மேல தப்பு சொல்வீங்க, அவங்க உங்க மேல தப்பு சொல்வாங்க, நான் குறும்படம் ஏதாவது போட்டு யார் மேல தப்பு இருக்கு, யார் பண்ணது சரின்னு சொல்லலாம்னு பார்த்தா பொசுக்குன்னு இப்படி பண்ணிட்டீங்களே என்கிற ரேஞ்சுக்கு கமல் மாறிவிட்டார்.
மன்னிப்பும் கேட்டாச்சு
அன்சீன்ல கூட காட்டாத சீனை கமலிடம் சுரேஷ் தாத்தா சொன்னது நிஜமாவே ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. அந்த டாஸ்க் முடிந்த உடனே சனம் ஷெட்டி வந்து, என்னிடம் மன்னிப்பு கேட்க வந்தாங்க, நான் தான் நீ அந்த நேரத்துல அவசரத்துல அப்படி பேசிட்டே, உன் மேல தப்பு இல்லை என சொல்லி விட்டேன் என்றும், ஒட்டு மொத்த பஞ்சாயத்தையும் முடித்து விட்டார்.
விட்டுருவாரா கமல்
ஓஹா சுரேஷா நீ இப்படி என் கிட்டயே கேம் ஆடுறியா.. சனம் பாப்பா ஒண்ணும் தெரியாம கோபப்படல, வேண்டும் என்றே திட்டம் போட்டு உன்னை திட்டியிருக்கு என வேல்முருகனை வைத்து வேற ஒரு கேம் ஆடிட்டு, மறுபடியும் சனம் ஷெட்டிக்கும் சுரேஷுக்கும் இடையே நல்லா கொளுத்திப் போட்டுட்டு போய்ட்டார்.