4 மணி நேரம் பிக் பாஸ்.. விஜய் டிவியின் ஸ்பெஷல் விஜயதசமி புரோகிராமே இதுதான்.. எவிக்‌ஷனே இல்லை!

4 மணி நேரம் பிக் பாஸ்.. விஜய் டிவியின் ஸ்பெஷல் விஜயதசமி புரோகிராமே இதுதான்.. எவிக்‌ஷனே இல்லை!

என்ன இன்னும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆயுத பூஜை கொண்டாடலயேன்னு நினைச்சிட்டு இருந்த ரசிகர்களுக்கு அட்டகாசமான புது புரமோ வெளியாகி சந்தோஷப்படுத்தி உள்ளது.

என்ன திடீர்னு இந்த டைம்ல கமல் புரமோ வருதேன்னு பார்த்தா ஆயுத பூஜை, விஜய தசமி செலிபிரேஷன் புரமோவுடன் வந்துட்டார்.

மேலும், இந்த வாரம் ஆஜீத் அந்த எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸை யூஸ் பண்ணி சேவ் ஆயிட்டார் என்பதும் இந்த புரமோ மூலம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

4 மணி நேரம் பிக்பாஸ்

4 மணி நேரம் பிக்பாஸ்

இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஏகப்பட்ட புது விஷயங்களுடன் அரங்கேறி வருகிறது. முதல் முறையாக தொடர்ச்சியாக 4 மணி நேரம் பிக் பாஸ் நிகழ்ச்சி நாளை மாலை 6.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது. அதன் அறிவிப்பை தற்போது புது புரமோவுடன் கமல் சொல்லி ரசிகர்களை குஷியாக்கி உள்ளார்.

விஜயதசமி ஸ்பெஷல்

விஜயதசமி ஸ்பெஷல்

நாளைக்கு விஜய் டிவியின் விஜயதசமி ஸ்பெஷல் நிகழ்ச்சியே இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தான் என்பது ரசிகர்களுக்கு ஒரு பக்கம் ஆனந்தமாகவும், மறு பக்கம், வேற எதுவும் ஸ்பெஷல் புரோகிராமே இல்லையா என்கிற வருத்தத்தையும் கொடுத்துள்ளது. நிச்சயம் நாளைக்கு செம விருந்து காத்துட்டு இருக்கு.

கண்ணம்மாவ பார்க்க முடியாதா

கண்ணம்மாவ பார்க்க முடியாதா

பிக் பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சியை நாளைக்கு 4 மணி நேரம் தொடர்ந்து பார்க்கப் போகிறோம் என சந்தோஷப்படுறதா? இல்லை பாரதி கண்ணம்மா சீரியலை பார்க்க முடியாதே என வருத்தப்படுவதா? என்றும் புரியாமல் கண்ணம்மாவின் தீவிர ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளனர்.

நகரம் vs கிராமம்

நகரம் vs கிராமம்

பிக் பாஸ் வீட்டில் நாடா? காடா? டாஸ்க் நடந்து முடிந்த நிலையில், அடுத்ததாக நகரம் vs கிராமம் என ஆயுத பூஜை, விஜயதசமி கொண்டாட்டத்தை கொண்டா உள்ளனர். பிக் பாஸ் போட்டியாளர்கள் இரு பிரிவுகளாக பிரிந்து இதை செய்யும் அசத்தல் புரமோ தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

அவசரப்பட்டுட்டாரோ ஆண்டவர்

அவசரப்பட்டுட்டாரோ ஆண்டவர்

பொறுமையா இன்னைக்கு நிகழ்ச்சி முடியும் போது, கமல் சார் எவிக்‌ஷன் இல்லை என்று ஆன பிறகு, இந்த புரமோவை வெளியிட்டு இருக்கலாமே? கொஞ்சம் அவசரப்பட்டுட்டாரோ ஆண்டவர் எனவும் பிக் பாஸ் ரசிகர்கள் கூறி வருகின்றனர். சிலர், இது இன்னைக்கே நடந்துருக்கும், எவிக்‌ஷன் இருந்தாலும் இருக்கும் என இன்னமும் நம்புகின்றனர்.

கமல் எஸ்கேப்

கமல் எஸ்கேப்

கொடுத்த நாற்காலியையும் விஜய் டிவி பிடுங்கி கொண்டதால், 8 மணி நேரம் சனி மற்றும் ஞாயிறு நிகழ்ச்சியை ரெண்டு டிரெஸ் மாத்தி கமல் நடத்தி முடித்து கால் வலிக்க, நல்ல வேளை நாளைக்கு 4 மணி நேரம் நடக்கும் நிகழ்ச்சியில் நான் இல்லை என எஸ்கேப் ஆகி செல்லும் புரமோ வேற லெவல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *